சேலத்தில் சுவற்றில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

57பார்த்தது
சேலத்தில் சுவற்றில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
சேலத்தில் நள்ளிரவு சுவற்றில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். பிரபல ரவுடிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அழகாபுரம் தங்கவேல் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் வினோத் (20). இவர் நேற்று மாலை, தனது பைக்கில் ரெட்டியூரை சேர்ந்த நண்பரான பிரபல ரவுடி தினேஷ்குமார் (24) என்பவருடன் வெளியேச் சென்றார். நள்ளிரவு 11 மணியளவில் இருவரும் நகரமலை அடிவார பகுதியில் இருந்து ரெட்டியூருக்கு பைக்கில் வேகமாக வந்துள்ளனர். பைக்கை தினேஷ்குமார். ஒட்டியுள்ளார், அழகாபுரம் காட்டூர் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த வீட்டு சுவற்றில்வேகமாக பைக் மோதியது. இதில், வினோத், தினேஷ்குமார் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அவ்வழியே வந்தவர்கள், இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை
பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். ரவுடி தினேஷ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து பற்றி அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் அதிவேகமாக பைக்கில் வந்து சுவற்றில் மோதியிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி