டிரோன்கள் பறக்கத் தடை - ஆட்சியர் உத்தரவு

72பார்த்தது
டிரோன்கள் பறக்கத் தடை - ஆட்சியர் உத்தரவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் வருகின்ற 11. 07. 2024 அன்று டிரோன்கள் பறக்கத் தை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 11. 07. 2024, வியாழக்கிழமை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

இதற்காக, வருகின்ற 11. 07. 2024 அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார்கள்.
இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் வருகின்ற 11. 07. 2024, வியாழக்கிழமை அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட டாக்டர். இரா. பிருந்தாதேவி. இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி