சேலம்: தொழில்பூங்கா பணி; எம்எல்ஏ ஆய்வு

61பார்த்தது
சேலம்: தொழில்பூங்கா பணி; எம்எல்ஏ ஆய்வு
கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ. பேசும் போது, சேலத்தில் ஒருங்கிணைந்த வெள்ளி தொழில் உற்பத்தி மையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளி பன்மாடி தொழில் பூங்கா அமைப்பதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்ததுடன் அந்த பணியை தொடங்கி வைத்தார். 

தற்போது அங்கு 3 மாடிகளுடன் 110 கடைகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பணியை நேற்று (நவம்பர் 21) அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வந்த வெள்ளி தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் அருள் எம்.எல்.ஏ.வை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். 

அதாவது, வெள்ளிக் கொலுசு உற்பத்தி செய்வதற்கு பல்வேறு வகையான செய்முறைகள் உள்ளன. வெள்ளிக்கட்டிகளை கட்டிங் செய்யும் போது எந்திரத்தை தரையில் பொருத்தி கட்டிங் செய்ய வேண்டும். கட்டிடத்தின் மேல்பகுதியில் உள்ள அறைகளில் எந்திரத்தை பொருத்தினால் கட்டிடத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே கட்டிங் எந்திரத்தை தரைத்தளத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வெள்ளிக்கட்டியை இங்கு கொண்டுவந்து கொலுசாக மாற்றி ஏற்றுமதி செய்வது வரை அனைத்தையும் இந்த கட்டிடத்தின் உள்அமைப்புகளிலேயே அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூறினர்.

தொடர்புடைய செய்தி