சேலம் மாநகராட்சி அலுவலகம்முன்பு அமர்ந்து அருள் எம்எல்ஏ தர்ணா

56பார்த்தது
சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் செல்வ விநாயகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் போராட்டத்தில் ஈடுபட்டார். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் போது முதலமைச்சர் தன் தொகுதிக்கு செய்ய வேண்டிய 10 கோரிக்கைகளை கேட்டு வாங்கினார். அதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட சில திட்டங்கள் அரசு நிறைவேற்றி தந்த போதிலும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக குரங்கு சாவடி பெருமாள் மலை கிரிவல சாலை அமைக்க ரூபாய் 94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்த சாலை அமைக்காமலேயே அமைக்கப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை வெளியிட்டதுள்ளதாக சுட்டிக்காட்டி வடிவேல் பாணியில் புகார் தெரிவித்தார். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தன்னால் எந்த திட்டப்பணிகளையும் செய்ய முடியவில்லை இதற்கு திமுகவினர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்றும் எம்எல்ஏ அருள் குற்றம் சாட்டினார். நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து சேலம் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது அவர் மக்கள் பிரதிநிதி என்றும் பாராமல் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் அருள் கூறினார். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏவிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி திட்டங்களை நிறைவேற்றிட உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை அவர் கைவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி