மாநகராட்சிக்கு செய்தி மக்கள்தொடர்பு துறை இணைஇயக்குனர் நியமனம்

81பார்த்தது
மாநகராட்சிக்கு செய்தி மக்கள்தொடர்பு துறை இணைஇயக்குனர் நியமனம்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும் 4 துணை இயக்குனர்களுக்கு, இணை இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்-அமைச்சர் அலுவலக துணை இயக்குனர் பிரபுகுமார், சென்னை மாநகராட்சி துணை இயக்குனர் செந்தில்குமார், நீர்வளத்துறை துணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் ஆகியோருக்கு இணை இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. துணை இயக்குனர் அண்ணாதுரை இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். மெட்ரோ ரெயில் நிறுவன இணை இயக்குனர் கிரிராஜன் சேலம் மாநகராட்சிக்கும், மின் வாரிய இணை இயக்குனராக பழனியப்பனும் இட மாற்றத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி