சேலத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் முதியவர் கைது

1078பார்த்தது
சேலத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் முதியவர் கைது
சென்னையை சேர்ந்த 31 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு ஈரோட்டில் இருந்து அவர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்தார்.

அதே ரெயில் பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டைக்கு சென்றதும் சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே போலீசில் கூறியுள்ளார். உடனே அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன்பாஷா (வயது 71) என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி