பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அ. தி. மு. க. சார்பில் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் நலிந்த நாடக கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சுமார் 500 நாடக கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதாவது அவர் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, வேட்டி, சட்டை, சேலை ஆகியவை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாடக கலைஞர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.