சேலம் தொகுதியில் கடந்த தேர்தலைவிட அதிக ஓட்டுகள் பெற்ற அதிமுக

65பார்த்தது
சேலம் தொகுதியில் கடந்த தேர்தலைவிட அதிக ஓட்டுகள் பெற்ற அதிமுக
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலை விட அ. தி. மு. க. வேட்பாளர் சுமார் 33 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை அ. தி. மு. க. கூட்டணியில் தே. மு. தி. க. மட்டுமே குறிப்பிட்டு கூறும்படியான கட்சியாக இருந்தது.
அதே நேரத்தில் தி. மு. க. அணியில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம. தி. மு. க. , மக்கள் நீதி மய்யம், முஸ்லிம் லீக் என்று கூட்டணி பலமாக அமைந்தது. சேலம் மேற்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் டி. எம். செல்வகணபதி களம் இறங்கினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை முடிவில் அவர் 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இருப்பினும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அ. தி. மு. க. வேட்பாளர் விக்னேஷ் 4 லட்சத்து 95 ஆயிரத்து 728 ஓட்டுகளை பெற்றார். இந்த ஓட்டானது 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ. தி. மு. க. வேட்பாளர் சரவணன் பெற்ற வாக்குகளை விட சுமார் 36 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி. மு. க. வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன் 6 லட்சத்து 6 ஆயிரத்து 302 ஓட்டுகளை பெற்றிருந்தார். தற்போது டி. எம். செல்வகணபதி பெற்ற ஓட்டுகள் (5 லட்சத்து 66 ஆயிரத்து 85) ஓட்டுகள் என்பது குறைவாகும். 40 ஆயிரத்து 217 ஓட்டுகள் அவர் குறைவாக பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி