தீபாவளிக்கு பட்டாசுக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசு விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்தால் கடையின் அனுமதியை இரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் உத்தரவு.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக் கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை தீயணைப்புத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.