சேலம் மாவட்ட அளவிலான 12-வது தற்காப்பு கலை (வூசூ) போட்டி நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக வூசூ சங்க தலைவர் நாராயணன், துணை தலைவர் சொக்கலிங்கம், பொருளாளர் காளிப்பாப்பன், யோகா மாஸ்டர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை சேலம் மாவட்ட வூசூ மற்றும் குங்பூ தற்காப்பு கலை பயிற்சி பள்ளி செயலாளரும், தலைமை பயிற்சியாளருமான எஸ். கோபி, துணை செயலாளர் ஆர். முருகன், எஸ். ரபீக், குழு உறுப்பினர் எஸ். செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சீனியர் பிரிவில் தாமோதரன், குணசேகர், சித்தஸ்வன் ஆகியோர் தலா ஒரு தங்கமும், சப்-ஜூனியர் பிரிவில் உவன், துகிலன், அதித் ராஜேஷ், பிரகல்யா, ஜோஸ்னா, மகித், சுப வர்ஷினி, தேவஸ்ரீ, வாரிதத், பவதாரணி ஆகியோர் தங்கமும், சீனியர் சண்டை பிரிவில் 85 கிலோ எடை பிரிவில் திலகர் தங்கப்பதக்கமும், 75 கிலோ எடை பிரிவில் வடிவேலு தங்கப்பதக்கமும், ஜூனியர் பிரிவில் ரிபாஸ்கால், அப்துல்கலாம், மிருதுளா ஆகியோர் தங்கப்பதக்கமும், சப்-ஜூனியர் பிரிவில் விதுரா தங்கமும், லக்சன் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.