சேலத்தில் முதியவரிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்

69பார்த்தது
சேலத்தில் முதியவரிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவர் நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென அவரிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி சென்று பெரியார் மேம்பாலம் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த நபர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி