மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

51பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
சேலம் மாவட்டத்தில் 5 இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
திட்ட முகாம்
சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 12-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்டத்தில் 5 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளன.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காட்டுவேப்பிலைப்பட்டி, வேப்பிலைப்பட்டி, ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது காட்டுவேப்பிலைப்பட்டி வசந்த மஹாலில் நடைபெறவுள்ளது. ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லம்மாள் கோட்டமாரியம்மன் கோயில் பனங்காடு திருமண மண்டபத்திலும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரப்பள்ளி மற்றும் சாணாரப்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது ஆட்டுகாரன்வளவு ஸ்ரீ ராமலிங்க கிருஷ்ணவேனி அம்மாள் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே, சேலம் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி