சேலம் ஜங்ஷன் காசகாரனூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கார்த்திகா மணி. இவருக்கு கன்னங்குறிச்சி சாய்பாபா காலனியில் விவசாய நிலம் உள்ளது. அதில் மாட்டுக்காக தீவனப்புல் பயிரிட்டு இருந்தார். அந்தப் புற்கள் செல்வமணி என்பவரது தோட்டத்தில் சாய்ந்து இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கார்த்திகாமணி தீவனப்புல் அறுத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது செல்வமணி, ராஜாத்தி ஆகியோர் கார்த்திகா மணியிடம் தகராறு செய்து இரும்பு அவரை கம்பியால் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார், செல்வமணி, ராஜாத்தி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.