ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலகுட்டப்பட் டியில் உள்ள தொட்டியத்து மாரியம்மன் கோவில் திருவிழா வையொட்டி எருதாட்டம் நடத்தி கம்பம் நட்டு 15 நாட்கள் கழித்து பொங்கல் திருவிழா மற்றும் கரகம் வாணவேடிக்கை நடைபெறும்.
இந்த நிலையில் கம்பம் நடுதலை முன்னிட்டு எருதாட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட எருதுகளை கயிறு கட்டி எருதாட்டத்தில் வாலிபர்கள் ஈடுபட்டனர். ஆனால் எருது களை ஒன்றன்பின் ஒன்றாக விடாமல் 4 திசைகளிலும் இருந் தும் விட்டதால் வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இடையே எருதுகள் புகுந்து சென்றது. இதனால் வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற் றும் பெண்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் எருது கள் முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஓம லூர் அரசு மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.