நெடுஞ்சாலை துறையின் 66 ஆவது பொதுக்குழு கூட்டம்

1273பார்த்தது
சேலம் நெடுஞ்சாலைத்துறையில் நிலவும் பணிச்சுமையை குறைக்க மண்டல வாரியாக தலைமை பொறியாளர்கள் அமர்த்தப்பட்டு பணிகள் பகிர்ந்தளிக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 2010ம் ஆண்டு வழங்கிய 6வது ஊதிய குழு ஊதியத்தின் அடிப்படையில் 7வது ஊதிய குழு ஊதியத்தினை பொறியாளர்களுக்கு வழங்க வேண்டும்; நெடுஞ்சாலை துறையில் நிலவும் பணி சுமையை குறைக்க மண்டல வாரியாக தலைமை பொறியாளர்கள் அமர்த்தப்பட்டு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி