சேலம்: பறிமுதல் செய்யப்பட்ட 62 வாகனங்கள் ரூ.14 லட்சத்திற்கு ஏலம்

63பார்த்தது
சேலம்: பறிமுதல் செய்யப்பட்ட 62 வாகனங்கள் ரூ.14 லட்சத்திற்கு ஏலம்
சேலம் மாநகரில் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார், ஆட்டோக்கள் இன்று (ஜனவரி 4) ஏலம் விடப்பட்டது. இதில் மூன்று ஆட்டோ, நான்கு கார், 69 டூவீலர் என மொத்தம் 75 வாகனங்கள் ஏலத்தில் வைக்கப்பட்டன. சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. தலைமை இடத்து துணை கமிஷனர் கீதா தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் பரவாசுதேவன், அரசு ஆட்டோமொபைல் இன்ஜினியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் டூவீலர் ஏலம் எடுப்பவர்கள் ரூ. 5000, ஆட்டோவுக்கு ரூ. 7000, காருக்கு ரூ. 10,000 என 160 பேர் முன்பணம் கட்டி டோக்கன் வாங்கிக் கொண்டு ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் போட்டி போட்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக பணத்தைக் கட்டி வண்டியை வாங்கிக் கொள்ள வேண்டும். இதில் 62 வாகனங்கள் ரூ. 14 லட்சத்து 6000க்கு ஏலம் போனது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி