சேலம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்

52பார்த்தது
சேலம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்
சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தல், பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், இரும்பாலை, கருப்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 27), சிவதாபுரம் பெருமாள்கோவில் கரட்டை சேர்ந்த ஜெயக்குமார் (45), ஓமலூர் வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (38), பெருமாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் கருப்பூர் மூங்கில்பாடியை சேர்ந்த சேது என்கிற பிரேம் (19), அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்த கவியரசன் (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1, 675 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி