சேலத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

76பார்த்தது
சேலத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் செவ்வாய்பேட்டை ரெயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 30), சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த மதனகுமார் (29), கொண்டலாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி