சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சிகலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் இன்று நடந்தது. இதில் சேலம் எம்பி செல்வகணபதி, மேயர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கினர். இது குறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டம் வரும் 6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த 674 மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இன்று வரையில் 23, 927 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். அதேபோன்று அரசு பள்ளியில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடுவோம். அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடுவும் தமிழ் புதல்வன் திட்டம் 9. 8. 2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் இன்று வரையில் 14, 657 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.