சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை

51பார்த்தது
சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை
சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குழந்தை திருமணம் செய்தாலோ அல்லது குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணம் செய்யப்படுவதால் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு, உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடப் பெரிதும் வாய்ப்பாக அமைகிறது. குழந்தைகளின் கல்வி உள்பட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தற்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தை திருமணம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி