சேலம் அன்னதானப்பட்டி கந்தப்பா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (55). இவர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன், 2, 200 ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இதுபற்றி பள்ளப்பட்டி போலீசில் குணசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம், செல்போனை பறித்துச்சென்றது பொன்னமாபேட்டை திப்பு நகரை சேர்ந்த இம்ரான்(21), கார்பெட் தெருவை சேர்ந்த
விஜய்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.