தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு நாமக்கல்லை சேர்ந்த 2பேர் கைது

61பார்த்தது
தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு நாமக்கல்லை சேர்ந்த 2பேர் கைது
சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நாமக்கல் செல்வதற்காக சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த விக்ரம் (23), சதீஷ் (23) என்பதும்செல்போன் பறித்ததையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி