சேலம் திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரை சேர்ந்தவர் தயாளன். ஓய்வுபெற்ற துணை தாசில்தார். இவர், நேற்று முன்தினம் தனது மகன் கவுதமுடன் வீட்டில் இருந்தார். பிற்பகல் 3 மணியளவில் வீட்டின் மொட்டை மாடி வழியாக வந்த 2 பேர் அங்கு பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியை திருட முயன்றனர். இதனை பார்த்த கவுதம் அங்கிருந்தவர்களின் உதவியுடன் இருவரையும் பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்தீப்குமார் நீத்தன் (வயது 23), சியாம்லால் (23) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.