புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

4890பார்த்தது
புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேரூர் செக்காரப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் (வயது 18). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள குள்ளப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (18). அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். சேலம் கருப்பூர் மேட்டுப்பதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோகுல்.

நண்பர்களான இவர்கள் 3 பேரும் கல்லூரியில் உணவு இடைவேளையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோட்டுக்கு சென்றனர். அப்போது செம்மாம்பாளையம் அருகே சென்றபோது இடதுபுறம் திரும்பிய வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக திருப்பிய போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் கோகுல் மற்றும் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தரணிதரன் படுகாயங்களுடன் மயக்கமடைந்தார்.

விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் சாலையில் மயங்கி கிடந்த தரணிதரனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயக்கமடைந்து நினைவு திரும்பாத நிலையில் உள்ள தரணிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி