10. 5 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
வன்னியர்களுக்கு 10. 5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி சேலம் மாநகர் மாவட்ட பா. ம. க. சார்பில் கோட்டை மைதானம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம். எல். ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கதிர். ராசரத்தினம் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா. ம. க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வன்னியர்களுக்கு 10. 5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அருள் எம். எல். ஏ. நிருபர்களிடம் கூறுகையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1, 000 ஆவது நாள் கடந்தும் இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. சமூகநீதி பேசி வரும் தி. மு. க. சமூக அநீதியாக நடந்து கொள்கிறது. சுமார் 2 கோடி பேர் உள்ள வன்னியர்களை தி. மு. க. அரசு வஞ்சிக்கிறது. வன்னியர்களுக்கு 10. 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கிடைக்கும் வரை பல்வேறு வடிவங்களில் எங்களது போராட்டம் தொடரும், என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி