சேலம்: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் எம்எல்ஏ, அமைச்சர் ஆகலாம்

77பார்த்தது
சேலம்: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் எம்எல்ஏ, அமைச்சர் ஆகலாம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓமலூர், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணி வரவேற்றார். டெல்லி மேல்சபை எம்.பி. சந்திரசேகரன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர்கள் கலையரசன், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். 

அவர் பேசும்போது, 'அ.தி.மு.க.வில் தான் யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ. ஆகலாம், அமைச்சராகலாம் என்ற நிலை இருக்கிறது. தமிழகத்திலேயே சேலம் மாவட்டத்தில் தான் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக செயல்படுகிறது என்ற பெயர் பெற வேண்டும். 

சேலம் மாவட்டத்தில் தொகுதிக்கு 20 ஆயிரம் பேர் பூத்துக்கு 100 பேர் என வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்கி அதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான திட்டங்கள், கட்சித் தலைமை அறிக்கைகளை ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் பதிவிட வேண்டும்' என்றார். 

இதில் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், மேச்சேரி, கொளத்தூர், மேட்டூர் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி