சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மஞ்சுளாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி மீர்ஷா, இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனால் கணவன்-மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அரிகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.