கெங்கவல்லி வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒப்புச்சான் மலை வனப்பகுதியில், வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் இன்று மரக்கன்றுகள் நடப்பட்டது. வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். வனத்தை பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதென உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.