சேலம்: கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் எருது முட்டி மாணவன் காயம்

68பார்த்தது
சேலம்: கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் எருது முட்டி மாணவன் காயம்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 18). இந்த மாணவன், சிக்கனம்பட்டி ஏ.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ- மாணவிகள் பொங்கலிட்டு எருதுகளைக் கொண்டுவந்து பூஜை செய்து வழிபாட்டை நிகழ்த்தினர். 

அப்போது எருது ஒன்று மிரண்டு மாணவர்களை நோக்கிப் பாய்ந்தது. இதில் கல்லூரி மாணவன் தனுஷ் மீது எருது முட்டியது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே மாணவன், காமலாபுரம் பிரிவு ரோடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கல்லூரியில் நடந்த விழாவில் எருது முட்டி மாணவன் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி