சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, 1 வது கோட்டம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட பாமக செயலாளருமான அருளை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர். பாமகவின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென எம்எல்ஏ அறிவுரை வழங்கினார். ஏராளமான பாமக் நிர்வாகிகள் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்