ஓமலூரை அடுத்த திண்டமங்கலம் ஊராட்சி பனங்காட்டூர் அரசு பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு திட் டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. தொடர்ந்து புதிய பள்ளி கட்டிடத்துக்கான பூமிபூஜை நடந்தது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆசைத்தம்பி வரவேற்றார். முன்னாள் எம். எல். ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அ. தி. மு. க. செயலாளர் அசோகன், ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணி எம். எல். ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜையை முகூர்த்தக்கால் நட்டு தொடங்கி வைத்தார்.