சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர். தோப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 13) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 முதல் மாலை 5 மணி வரை அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, காரைசாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர். தோப்பூர், அழகுசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. அதே போன்று கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, இரும்பாலை, மோகன்நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ஓமலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.