பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

75பார்த்தது
ஓமலூர்;

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 7 ஆண்டுகளாக நிரப்பப் படாத பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பதவியினை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

லஞ்சஒழிப்புத் துறை தனது வழக்குகளை விரைந்து முடித்து முதல் தகவல் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும்.

உறுப்புக்
கல்லூரி முதல்வர்களை பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.

வரலாறு, கல்வியியல் மற்றும் இயற்பியல் துறை தலைவர்களை அந்தந்த துறை ஆசிரியர்களைக் கொண்டு நியமிக்க வேண்டும்.

ஆட்சிக்குழு தீர்மானத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
தமிழக அரசு நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை ஒரு ஐஏஎஸ் அதிகாரியினை பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மற்றும் பல்கலைக்கழக வழக்கறிஞர்களை மாற்றி புதிய அரசின் சார்பில் வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு பெரியார்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி