ஓமலூர்: மயங்கி கிடந்த முதியவர் சாவு

4பார்த்தது
ஓமலூர்: மயங்கி கிடந்த முதியவர் சாவு
ஓமலூர் பஸ் நிலையம் அருகில் சுமார் 77 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்குள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு வரக்கூடிய பொதுமக்களிடம் உதவி பெற்று அதில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்துபோன முதியவரின் பெயர் ரவி என்பதும், அவர் சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறந்த முதியவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பற்றி கருங்கல்பட்டி பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அதுபற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை. எனவே, இறந்துபோன ரவியின் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி