ஓமலூரில் பெய்த கனமழை - முறிந்து விழுந்த மரங்கள்

1097பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மாலை கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கன மழை காரணமாக ஓமலூர் மேட்டூர் பிரதான சாலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் தாலுகா அலுவலகம் முதல் ஓமலூர் பேருந்து நிலையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து விரைவாக அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் முறிந்து விழுந்த மரக்கிளையை அப்புறப்படுத்தும் பணிகள் விரைவாக ஈடுபட்டனர். மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டதையடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன.

தொடர்புடைய செய்தி