சேலம் காந்தி ஸ்டேடியத்தில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து அறிஞர் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டியை நேற்று ஏற்பாடு செய்தனர். இதனை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்