ஓமலூர்: தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் பாய்ந்த லாரி

0பார்த்தது
ஓமலூர்: தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் பாய்ந்த லாரி
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பூசாரிப்பட்டி அருகே சரபங்கா ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. நேற்று காலை சேலத்திலிருந்து தர்மபுரியை நோக்கி பார்சல் லாரி ஒன்று சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பார்சல் லாரி, சரபங்கா ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது. 

இதில் லாரியின் பின்பக்க டயர் மட்டும் பாலத்தின் தடுப்புச்சுவரில் சிக்கியது. இதனால் அந்த லாரி அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மீட்பு வாகனம் மூலம் லாரி மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி