காமலாபுரம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும்

83பார்த்தது
காமலாபுரம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சியை காமலாபுரம், பள்ளிவீரன்காடு என 2 ஊராட்சிகளாக பிரிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் காமலாபுரம் மாரியம்மன் கோவில் திடலில் கவனஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் காமலாபுரம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பேரூராட்சியாக மாற்றப்படுவதாக வந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த காமலாபுரம் ஊராட்சியை பேரூராட்சியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காமலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி