காடையாம்பட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கைப்பந்து போட்டி

70பார்த்தது
காடையாம்பட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கைப்பந்து போட்டி
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு காலனியில் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், பேரூர் தி. மு. க. சார்பில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, கைப்பந்து போட்டி தொடக்க விழா நடந்தது. இதற்கு காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். காடையாம்பட்டி பேரூர் செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். 

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சேலம் மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அன்புக்கரசு கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அருள், பேரூராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, பேரூர் அவைத்தலைவர் முத்து, கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி