சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் நேற்று மாலை பலத்தகாற்று வீசிய நிலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. கொங்கணாபுரம், எருமைபட்டி, கச்சுப்பள்ளி, மகுடஞ்சசாவடி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.