குரல் நமது மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக வலைதளம் அறிமுக கருத்தரங்கு நிகழ்ச்சி ஒய். எம். சி. ஏ. அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு VRDP இயக்குனர் ஆர். ரங்கநாதன் தலைமையுரையாற்றினார்.
VRDP விஜயா வரவேற்புரை வழங்கினார்.
எனேபிள் இந்தியா பெங்களூர் சங்க மேலாளர் நந்தினி அறிமுக உரை வழங்கினார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு அலுவலக அலுவலர் குரு பிரகாஷ் துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.
சேலம் Rseti இயக்குனர் லலித் காயத்ரி, பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை தலைவர் கோபாலகிருஷ்ணன், எனேபிள் இந்தியா மாநில மேலாளர் விமல் ராஜ்குமார், பெங்களூர் எனேபிள் இந்தியா செயலாளர் சின்னத்துரை, சேலம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழு சட்டஇயல் வழக்கறிஞர் புவனேஸ்வரி, விழுதுகள் 87 அறக்கட்டளை முரளிதரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். சேலம் VRDP எஸ். ஏ. பட்டாபி ராஜா நன்றியுரை வழங்கினார். கிராம சீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டம் (VRDP) சேலம் எனேபிள் இந்தியா இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.