சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் கூடிய அரசு சிறப்பு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இந்தாண்டுக்கான காது கேளாத, வாய் பேச இயலாத, செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகின்றது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பாசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச தங்கும் விடுதி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.