ஓமலூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி தொடக்கம்

85பார்த்தது
ஓமலூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி தொடக்கம்
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதாலும், இடவசதி பற்றாக்குறையாலும் புதிய அலுவலக கட்டிடம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தா தேவி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், மாவட்ட கூடுதல் கலெக்டர் பொன்மணி, ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ரமேஷ் செல்வ குமரன், பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, மகாராஜன், ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி