சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பஞ்சுகாளிப்பட்டியில் சவுத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஸ்ருதிலயா. இந்த மாணவி சத்தீஸ்கரில் நடந்த சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இந்த மாணவிக்கு சென்னையில் நடந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் சவுந்தரராஜன் மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பிருத்திவிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.