சேலம் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜ், அர்த்தனாரி மற்றும் போலீசார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது தட்டாஞ்சாவடி புதூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 57), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் (30), கொல்லப்பட்டியை சேர்ந்த வீரமணி (35), கோட்டக்கவுண்டம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (43), தேக்கம்பட்டியை சேர்ந்த பாபு (28), கருப்பூரை சேர்ந்த ஏழுமலை (47) ஆகியோர் தடை செய்யப்பட்ட Perhaps சீட்டுகளை விற்பனை செய்ததை பார்த்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.