ஓமலூரில் 3. 3 டன் கொப்பரை தேங்காய் ரூ. 4.28 லட்சத்திற்கு ஏலம்

60பார்த்தது
ஓமலூரில் 3. 3 டன் கொப்பரை தேங்காய் ரூ. 4.28 லட்சத்திற்கு ஏலம்
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் இன்று நடந்தது. ஏலத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 81 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

இந்த ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் குறைந்தபட்ச விலையாக ரூ. 96.12 முதல் அதிகபட்சம் ரூ. 146.09 வரை ஏலம் எடுத்தனர். மொத்தம் 3,335 கிலோ கொப்பரை தேங்காய் 4,28,174க்கு விற்பனையானது. கடந்த காலத்தை விட இந்த ஏலத்தில் கிலோவுக்கு ரூபாய் 3 கூடுதலாக விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி