ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

53பார்த்தது
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 2024 2025 ஆம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி சுகந்தி பரிமளம் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கென 26 விடுதிகளும். பள்ளி மாணவிகளுக்கென 10 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கென 2 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கென 3 விடுதிகளும் என 41 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விடுதிகளில் தங்கி கல்விப் பயில விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவும். உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இலவசமாக 4 இணைச் சீருடைகளும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி