வீட்டில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது

4436பார்த்தது
வீட்டில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது
கொளத்தூர் அருகே உள்ள மேட்டுப்பாளையூர் பகுதியை சேர்ந்தவர் பெருமா (வயது 42). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி