மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு தண்ணீர்.. அமைச்சர் தொடங்கினார்

55பார்த்தது
மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு தண்ணீர்.. அமைச்சர் தொடங்கினார்
மேட்டூர் அணையின் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பதற்காக சரபங்கா வடிகால் நிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பும் திட்டம் ரூ. 673 கோடியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 75 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் 55 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியும். மேட்டூர் அணை நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு 120 அடியை எட்டியது. இதனையடுத்து நேற்று மாலை மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு தண்ணீர் அனுப்பும் பணி தொடங்கியது. 

அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திப்பம்பட்டியில் உள்ள நிலையத்தில் இருந்து தண்ணீரை அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி, டி. எம். செல்வகணபதி எம்.பி., சதாசிவம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உபரிநீர் திட்டத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் நிரம்பிய போது உபரிநீர் திட்டத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

120 அடியை எட்டி நிரம்பிய நிலையில் காட்சி அளிக்கும் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1,791 கனஅடி தண்ணீர் வந்தது. இதில் வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் கால்வாய் மற்றும் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது. மீதம் உபரிநீர் திட்டத்துக்கு திறந்து விடப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி