மேட்டூரில் அனல் மின் நிலைய கொதிகலன் குழாயில் பழுது; மின்உற்பத்தி பாதிப்பு

80பார்த்தது
மேட்டூரில் அனல் மின் நிலைய கொதிகலன் குழாயில் பழுது; மின்உற்பத்தி பாதிப்பு
மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அணல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதிய அனல் மின் நிலையத்தின் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து இந்த பழுதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புதிய அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பழைய அணல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி